×

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்பு சாத்தியமா? : ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இயக்குனரகம் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என மாவட்ட அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆங்கிலவழி கல்வி தொடங்குவதற்கு தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படாது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டே ஆங்கிலவழிக் கல்வியை வகுப்புகளையும் நடத்த வேண்டும். அவ்வப்போது கல்வித்துறையின் மூலம் பிறப்பிக்கப்படும் ஆணைகளுக்குட்பட்டு ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுதொடர்பான ஆய்வறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : class ,Adivasi ,welfare schools ,Directorate , English class possible ,Adivasi welfare schools?
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...