×

கேங்மேன் தேர்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும்: மின்வாரியம் உத்தரவு

சென்னை: கேங்மேன் தேர்வு நடக்கும்போது, அதை வீடியோ பதிவு செய்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியம் கேங்மேன் (பயிற்சி) பணி குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பலரும் விண்ணப்பித்தனர். தற்போது பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட பணிக்கான உடல்பயிற்சி தேர்வு நடந்து வருகிறது. இவ்வாறு நடக்கும் தேர்வை வீடியோ பதிவு செய்து, ‘ஹார்ட் டிஸ்க்’ல் சேமித்து மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.  இது 4டிபிக்குள் மிகாமல் இருக்க வேண்டும். முதன்மை பொறியாளர்கள், தங்களது பகுதியில் இருந்து வரும் வீடியோ பதிவுகளை ஒன்றிணைத்து வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gangman , Gangman Selection, Video Recording, Electricity
× RELATED நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி