×

போலி எம்சாண்ட் விற்பனையை தடுக்க நடவடிக்கை:தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: தமிழகத்தில் போலி எம்சாண்ட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறபப்டுகிறது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழகத்தில் போலி எம்சாண்ட் குவாரிகள் ஏராளமானவை இயங்கி வருகிறது. இந்த எம்சாண்ட்டை பயன்படுத்தி வீடு கட்டும் பட்சத்தில் ஒரு சில வருடங்களிலேயே கட்டிடங்கள் உறுதி தன்மை இழந்து இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலர் சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 1200 குவாரி உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்பேரில் தற்போது வரை 184 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 35 குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. இந்த குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சிஎம்டிஏ, ஐஐடி பேராசிரியர், அண்ணா பல்கலை பேராசிரியர், அகில இந்திய கட்டுனர் சங்கம் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பேர் அடங்கிய நிபுனர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். அவர்கள், மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்த குவாரிகளில் தரமான எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த 35 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க இந்த கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுது.  இதை தொடர்ந்து எம்சாண்ட் தயாரிக்கும் ஒரு சில குவாரிகளில் தேவையற்ற துகள்களையும் எம்சாண்ட் என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

இதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தற்போது மதிப்பீட்டு சான்று வாங்கிய குவாரிகள் தேவையற்ற துகள்களை கலந்து விற்பனை செய்தால் அந்த குவாரிகளுக்கு வழங்கப்பட்ட சான்றை திரும்ப பெறுவது என்பதும், மற்ற குவாரிகளில் இது போன்று போலி எம்சாண்ட் விற்பனை செய்வதை தடுக்க முதற்கட்டமாக அந்த குவாரிகளுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் போலி எம்சாண்ட் விற்பனை செய்தால் அந்த குவாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

Tags : experts ,sale ,panel ,Essand , Fake Essand Sales, Team of Technicians
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...