×

நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் நாளை முதல் ‘பாஸ்டேக்’ திட்டம் அமல்: அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் எதிர்ப்பு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின்படி, கடந்த 1ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ‘பாஸ்டேக்’ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அமலாவதாக அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், கடந்த 1ம் தேதியில் இருந்து கட்டாயமாக்க அறிவிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகளின் கோரிக்கையால் டிச. 15ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில சுங்கசாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு கொண்டு வந்திருந்தாலும்கூட, நாளை (டிச. 15) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நிலையில், இதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘பாஸ்டேக்’ முறைக்கு பெரும்பாலான வாகனங்கள் மாறினாலும் போக்குவரத்து நெரிசல் அப்படியேதான் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்னைகளை மத்திய அரசும், சுங்கச்சாவடி ஊழியர்களும் சரிசெய்தால் மட்டுமே ‘பாஸ்டேக்’ திட்டம் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.

தினமும் 11.20 லட்சம் பரிவர்த்தனை
‘பாஸ்டேக்’ திட்டம் சில இடங்களில் அமலில் உள்ள நிலையில், சராசரியாக தினசரி பரிவர்த்தனைகள் ஜூலை மாதத்தில் 8.8 லட்சத்திலிருந்து நவம்பரில் 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, சராசரி தினசரி வசூல் ரூ.11.2 கோடியிலிருந்து ரூ.19.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து, ஆட்டோமொபைல் தொழிற்துறை லாபி சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (சியாம்) தலைவர் வதோா கூறுைகயில், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிய வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு ‘பாஸ்டேக்’குகளை பொருத்துவதற்காக நடவடிக்கை 2017ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டன.

100 சதவீத ‘பாஸ்டேக்’குகளை அமல்படுத்தினால், சாலைப் போக்குவரத்துத் துறையில் பல பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் இருக்கும், இது டோல் பிளாசாக்கள் வழியாக தடையற்ற இயக்கம் இருக்கும். பொருட்கள் மற்றும் பயணிகளின் இயக்கத்திற்கு பயண நேரம் குறையும். இது ஒட்டுமொத்த போக்குவரத்து திறனை மேம்படுத்துகிறது’’ என்றார்.

Tags : 400 Customs Centers ,Country Launch of 'Bostock' Scheme ,Customs Centers ,country ,facilities , Turnpike, 'pastek' project, implemented
× RELATED ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜவுக்கு...