வருசநாடு அருகே 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத மலைக்கிராமத்தில் திடீர் நீரூற்றுகள்

வருசநாடு, : வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பண்டாரவூத்து மலைக்கிராமம். மலைமேல் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி காரணமாக கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குடிப்பதற்குதண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வருசநாடு கிராமத்தில் பணம் கொடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குடிநீர் பிரச்னையால் பண்டாரவூத்து கிராமத்தில் வசித்து வந்த பலரும் கடந்த ஆண்டு வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் வருசநாடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது.

இதன் காரணமாக வறட்சியான பண்டாரவூத்து மலைக்கிராமத்தை சுற்றிலும் ஆங்காங்கே பல நீருற்றுகள் தோன்றியுள்ளன. இதன் காரணமாக இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தண்ணீர் மேலே பீய்ச்சி அடிக்கிறது. இந்நிலையில்  மூடி வைத்துள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பொங்கி வழிகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரே இல்லாமல் வாழ்ந்த மலைக்கிராம மக்கள் தற்போது பொங்கி வரும் தண்ணீரால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டாரவூத்து கிராமத்தில் தற்போது தண்ணீர் ஊற்று போல் பொங்கி வருகிறது.

Related Stories:

More
>