×

சாலைக்கிராமத்தில் புதருக்குள் புதைந்த போலீஸ் குடியிருப்பு : மிரட்டும் கொசுக்கள்; சுகாதார சீர்கேடு

இளையான்குடி:  சாலைக்கிராமத்தில் புதரின் நடுவே போலீஸ் குடியிருப்பு உள்ளது. அங்கு தேங்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேசன் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 25 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பணியில் சாலைக்கிராமம் போலீசார் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்களது குடும்பங்களுடன் வசிப்பதற்காக கடந்த 2000ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கட்டப்பட்டது. தற்போது ஏ, பி, சி எனும் இந்த குடியிருப்பில் போலீசாரின் குடும்பங்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளை சுற்றி செடி, கொடிகள் புதர்மண்டியுள்ளது.

மழை நீர் செல்ல வழியில்லாமல், கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதியிலேயே தேங்கியுள்ளது. அதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி போலீசாரை கடித்து வருகிறது. பகல் மற்றும் இரவு பணிகளில் அதிக நேரம் கண்விழித்து, சட்டம், ஒழுங்கை காப்பாற்றும் போலீசார், தூக்கமின்மையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்புகளை சுற்றிலும் புல், புதர் மண்டியுள்தால், விஷப் பூச்சிகள், வண்டுகள், பாம்புகள்  குடியிருப்புக்குள் வந்து தஞ்சமடைகிறது. அதனால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : roadside village ,village , Police dwelling ,bushes , roadside village
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...