×

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக கண்டன தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டுக்கு எதிரான கண்டன தீர்மானம்  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணை கமிட்டி ஒப்புதல்  அளித்துள்ளது. அதிபர் டிரம்ப், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, காங்கிரஸ் அவையை அவமதித்தது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு இரு அவையிலும் விவாதித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற  நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் ( ஹவுஸ் ஜுடிசரி கமிட்டி)உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் முறையே 23  மற்றும் 17 வாக்குகள் பதிவிட்டு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்அடுத்தகட்டமாக சம்பிரதாய ஒப்புதலுக்காக செனட் சபைக்கு இது அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் ஒப்புதல் பெறப்படும். அதன்பின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் கண்டன தீர்மானம் வெற்றி பெறும்பட்சத்தில் டிரம்பின் பதவி பறிபோகும். இதுபோன்று நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Trump ,referendum vote , President Trump, condemnation, referendum
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...