×

போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியர் மீது வழக்கு

கரூர்: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கரூர் அருகே பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணன். இவர், 1997ல் பணியில் சேர்ந்தபோது பள்ளி கல்வித்துறைக்கு அளித்த ஜாதி சான்றிதழில் தாழ்த்தப்பட்டோர் சாதி சான்றிதழ் என கொடுத்துள்ளார். ஆனால் இவர் மிக பிற்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். போலியாக தாழ்த்தப்பட்டவர் என சான்றிதழ் தயாரித்து அளித்து உள்ளது கடந்த மாதம் தெரிய வந்தது.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கரூர் தாசில்தார் அமுதா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்த கண்ணன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை தேடி வருகின்றனர்.

Tags : teacher , Case against teacher, forged forgery
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...