தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுடெல்லி: மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.  தற்போது தலைமை தகவல் ஆணையராக உள்ள சுதிர் பார்கவாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 11ம் தேதி முடிகிறது. மேலும் 4 தகவல் ஆணையர் ஆகிய 5 இடங்களையும் நிரப்ப மத்திய பணியாளர் அமைச்சகம் முடிவு செய்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அது வெளிட்டுள்ள அறிக்கையில், `இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூகசேவை. நிர்வாகம். ஊடகவியல் தொடர்பான அறிவு பெற்றவர்களாகவும், 65 வயதை எட்டாதவர்களாகவும், எம்பி அல்லது எம்எல்ஏ ஆக இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கான சம்பளம், படிகள் உள்ளிட்டவை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டபடி வழங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.  Tags : Chief Information Commissioner ,The Post , Chief Information Commissioner, Application
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...