×

நாடாளுமன்ற தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

புதுடெல்லி: கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் ஊடுருவி தீவிரவாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 5 டெல்லி போலீசார், சிஆர்பிஎப் பெண் வீரர், நாடாளுமன்ற ஊழியர்கள் 2 பேர், தோட்டக்காரர் என 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த வீரர்களின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இறந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.


Tags : attack , Parliament attack, dead, tribute
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...