×

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே இன்று மற்றும் நாளை காலை 9, 9.30, 10.25, 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று வேளச்சேரி - கும்மிடிப்பூண்டி இடையே இன்று காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே நாளை காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையே இன்று காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே நாளை காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே இன்று மற்றும் நாளை காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர் பேட்டை - மூர்மார்க்கெட் இடையே நாளை காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் சூலூர்பேட்டை - எண்ணூர் இடையே மற்றும் கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே இன்று மற்றும் நாளை காலை 10.50, 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Southern Railway , Electric trains canceled, Southern Railway
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...