×

பாரிமுனை லாட்ஜில் தங்கி கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் சிக்கினர்: 4 கிலோ பறிமுதல்

தண்டையார்பேட்டை: மண்ணடி ஐயப்பன்செட்டி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் கஞ்சா பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த லாட்ஜில் சோதனை செய்தபோது, ராயப்பேட்டை ஜாபர்கான் தெருவை சேர்ந்த அன்வர் பாஷா (26), அவரது தம்பி சிக்கந்தர் பாஷா (23), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த குர்சத் அலாம் (22), அன்வர் உசேன் (22), அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோபிஸ்குல் இஸ்லாம் (24), ரத்திக் (23) ஆகியோர், அறை எடுத்து தங்கி, கஞ்சா விற்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  „ புளியந்தோப்பு சிவராஜ்புரம் சாலையில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ராவணன் (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். „ கே.எம்.கார்டன் பகுதியில் மாவா மற்றும் மதுபாட்டில் பதுக்கி விற்ற துரை மற்றும் கதிரவன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ மாவா, 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

„ பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த அமுலு (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். „ அஸ்தினாபுரம் அம்பாள் நகர் 5வது தெருவை சேர்ந்த ராஜகுமாரி (22), அதே பகுதியில் உள்ள பாத்திர கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை வீட்டின் புங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். „ தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கடைகளுக்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்து வந்த கண்டிகையை சேர்ந்த தர்மலிங்கம் (46), மாம்பாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் (45) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 250 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். „ ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் மருத்துவ மாணவர்களின் அறையில் இருந்து 4 செல்போன், ஒரு லேப்டாப், 3 மணி பர்சை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

„ ஆவடியில் உள்ள தனியார் ஓட்டல் பார்க்கிங் பகுதியில் போதை பொருட்கள் வைத்திருந்த 54 வயது மதிக்கத்தக்க ஆசாமியை, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடமிருந்து 3.270 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த போதை பொருட்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். „ அடையாறு கஸ்தூரிபாய் நகர் 2 வது மெயின் ரோட்டை சேர்ந்த பத்மா (73) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் விளக்கேற்றியபோது, சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இறந்தார். „ புளியந்தோப்பு குருசாமி நகரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற புஷ்பா (66) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாடியிலிருந்து விழுந்த எஸ்.ஐ மனைவி பலி
வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி. காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோதி (65). இவர்கள் முதல் மாடியில் வசித்து வந்தனர். ஜோதி, நேற்று மாடியில் இருந்து கீழே இறங்க முயன்றபோது, கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.

Tags : traffickers ,Barimunai Lodge ,lodge ,youths , Barimunai Lodge, Ganja, 6 Plaintiffs
× RELATED அருகில் புதிய கட்டிடம் கட்ட...