குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் எதிரொலி : ஜப்பான் பிரதமரின் வருகை ரத்து

புதுடெல்லி: அசாமில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருவதால்  ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இருஅவைகளில் நேற்று முந்தைய தினம் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து, நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திருத்தம் அமலானது.

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை

இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா, மேகலயா ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமனும், உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானும் இந்திய வருகையை ரத்துசெய்தனர்.

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து

இந்தநிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் டிசம்பர் 15-17-ம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகை தருவதாக இருந்தது.அசாமில் தொடர்ந்து வரும் போராட்டத்தில் காரணமாக ஷின்சோ அபே வருகை ரத்தாகியுள்ளது. இது பற்றி டுவிட்டரில் அறிவித்துள்ள  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்த உச்சி மாநாட்டை வேறு தேதியில் நடத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன என  கூறி உள்ளார்.ஜப்பான் பிரதமர் அபேயை வரவேற்று குவஹாத்தியில் வைக்கப்பட்ட பேனர்களை போராட்டக்காரர்கள்  கிழித்து எறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அவரது வருகை ரத்தாகி உள்ளது.

Related Stories:

>