×

காரம்.. தரம்.. சூப்பர் எடப்பாடியே சாப்பிட்ட எகிப்து வெங்காயம் : சர்டிபிகேட் கொடுத்தார் செல்லூர் ராஜூ

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்து பார்த்தார். இந்த வெங்காயத்தில் சல்பர் அதிகம். அதனால் காரம் தூக்கலாக இருக்கும். இது இதயத்துக்கு நல்லது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தது. அதன்படி, குறைந்த விலைக்கு தரமான வெங்காயம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் எகிப்து வெங்காயம் டிசம்பர் மூன்றாம் வாரத்தில் தமிழகம் வந்தடையும். அவ்வாறு பெறப்படும் வெங்காயம், தமிழகத்தில் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 1,200 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு வெளிச்சந்தையை விட இந்த வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்தார். எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் அதிகமாக இருக்கும். இது இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது, எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில், தற்போது 60,000 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மேலும் 50,000 ஏக்கர் நிலத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூர், ஈரோடு, சேலம், சிவகங்ககை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி செய்ய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை 29 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 500 நியாய விலைக் கடைகளில் 50க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8.11.2019 முதல் 11.12.2019 வரை 116 மெட்ரிக் டன் அளவிலான வெங்காயம் 48.95 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Super Edapati ,Certipicate ,Egyptian ,Selur Raju , Egyptian Onion, Super Sermons
× RELATED ரோஸ் குவார்ட்ஸ் என்னும் காதல் ரத்தினம்