×

அமெரிக்காவில் இருப்பதாக நித்தியானந்தாவின் சிஷ்யைகள் தகவல்: அகமதாபாத் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: நித்யானந்தாவின் பெண் சீடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில் அவர்கள் அமெரிக்காவில் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு சொந்தமான குஜராத்தின் அகமதாபாத் ஆசிரமத்தில் பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் ஜனார்த்தனின் 2 மகள்களையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே, தலைமறைவான நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. ஈக்வெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டி அதை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை ஈக்வெடார் அரசு மறுத்தது. இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயமான 2 பெண்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நாங்கள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருக்கிறோம். சரியான முகவரி தெரியவில்லை. எங்கள் தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல், பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளதால் நீதிமன்றம் சம்மதித்தால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணைக்கு ஆஜர்படுத்துவோம் என்றார்.இதையடுத்து வழக்கில் தொடர்புடையவர்கள் வரும் 19ம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இதற்கிடையே, கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் நித்தியானந்தா மீதான வழக்கு நேற்று விசார ணை க்கு  நேற்றுவந்தது. இதில் வரும் 18ம் தேதிக் குள் நித்தியானந்தா எங்கி ருக்கிறார் என்று தெரிவிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.



Tags : Nithyananda ,United States ,Ahmedabad Eco Court ,Ahmedabad High Court ,nittiyananta , United States, Nityananda, Ahmedabad iCord
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்