×

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் ஒட்டுமொத்த டிஸ்மிஸ்

புதுடெல்லி: அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுசீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடம் தரப்படவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 18 மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அறையில், சுமார் ஒரு மணிநேர விசாரணைக்கு பின்பு, இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் தேவை இல்லை என்று கூறி, 18 மறுசீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Ayodhya , Ayodhya Case, Repeal Petitions, Dismiss
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து