யார் அவர் என கேட்ட விவகாரம் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடிகர் சித்தார்த் தாக்கு

சென்னை: தன்னை யார் என கேட்ட விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார். டிவிட்டரில்  சில தினங்களுக்கு முன் சித்தார்த் கூறும்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை எதுவும் கேட்காமல் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, சித்தார்த் என்பவர் யார், அவர் எந்த படத்தில் நடித்துள்ளார் என கேட்டார். விளம்பரத்துக்காக நடிகர்கள் சிலர் இதுபோல் விமர்சிப்பார்கள் என்று ஜெயக்குமார் கூறினார்.  இதுபற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள சித்தார்த், என்னை யார் என்று அமைச்சர் கேட்கிறார். 2014ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக தமிழக அரசு என்னை தேர்வு செய்தது. இதுவரை அதற்கான விருது வழங்கப்படவில்லை. விளம்பரத்துக்காக பேசும் அவசியம் எனக்கு இல்லை. இப்போது நான் எந்த நிலையில் இருக்கிறேனோ, அது எனக்கு உழைப்பாலும் நேர்மையிலும் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Siddharth ,attack ,Home Affairs Jayakumar ,Minister of State ,Home Affairs , Minister Jayakumar, actor Siddharth
× RELATED சித்தார்த் ஜோடியாகும் நிவேதா