ஸ்ரீரங்கநாதசாமி கோயில் சிலைகள் மாயமான விவகாரம்: அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்கு

சென்னை: திருச்சி ஸ்ரீ ரங்கநாதசாமி கோயில் மிகவும் பழமையானது. இந்நிலையில் கோயிலில் இருந்த உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டு மாயமானது. மேலும், கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.  மாயமானதாக கூறப்படும் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இந்து அறநிலையத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது.  இதற்கிடையே ஸ்ரீரங்கம் கோயிலில் மாயமான சிலைகள் குறித்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வழக்கை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் சிலைகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 6 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது.

அதன்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், சிலை கட்டத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் மாயமான காலத்தில் பணியாற்றிய இந்த அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது ஐபிசி 457(2),406, 409 மற்றும் 25(2) ஏஏடி ஆக்ட் 1972 ன் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாதவன் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : persons ,department officer ,Department of Justice , Sriranganathaswamy temple, idols and a charity officer
× RELATED மாற்றுத்திறனாளிகள் கூடுதல் உதவித்தொகை பெற அழைப்பு