×

உள்ளாட்சி தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.   உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில் இடபங்கீடு குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் உடன் இருந்தனர்.  பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  குடியுரிமை சட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தி வரும் மோடி அரசை எதிர்கொள்வது குறித்து பேசினோம். இந்த சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்களையும் விலக்கி வைத்திருப்பது குறித்து விவாதித்தோம். இந்த இரண்டு விஷயங்களை பிரதானமாக பேசினோம்.

 உள்ளாட்சி மன்ற தேர்தல் பற்றியும் பேசினோம். எல்லா தொகுதிகளிலும், எல்லா இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். வெற்றி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள், அதை எப்படி செய்வது பற்றி பேசினோம். இந்த தேர்தலில் 6000க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகள் இருக்கிறது. எனவே அதை பற்றி தனித்தனியாக பேச முடியாது.அதற்கான புள்ளி விபரங்களும் நம்மிடம் இல்லை.   எந்தெந்த மாவட்டங்களில் பிரச்னை இருக்கிறது. அப்படி ஏதாவது வருத்தங்கள் இருந்தால் அதை களைவது குறித்து விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : MK Stalin ,KS Alagiri ,elections , Local Election, MK Stalin, KS Alagiri
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...