லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் பிரியா (23). இவருக்கு கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது. இவரது திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தலைவாசல் ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் கீதா கைது செய்யப்பட்டார். விசாரணையில், விண்ணப்பங்களை மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப ₹3 ஆயிரமும், உதவித்தொகை மற்றும் தங்கம் ஒதுக்கீடு ஆனதும் ₹8 ஆயிரம் வரையிலும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : officer ,Female Officer , Bribery, female officer, suspended
× RELATED அவிநாசி விபத்தில்...