×

நெடுஞ்சாலையில் புலிகள் நடமாடியது மூணாறிலா?... தமிழக வனத்துறை மறுப்பு

திருவனந்தபுரம்: மூணாறு அருகே நெடுஞ்சாலையில் 2 புலிகள் நடமாடியதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ உண்மையில் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாகும். மூணாறு அருகே சின்னாறில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த நிலையில் சின்னாறு அருகே மாட்டுப்பெட்டியில் மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி பகல் ேநரத்திலும் வந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி நள்ளிரவில் சின்னாறு பகுதியில் உள்ள மூணாறு - உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் 2 புலிகள் சர்வசாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. அந்த வீடியோவில் 2 டிரைவர்கள் தமிழில் பேசுவதையும் கேட்க முடிந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ மூணாறில் எடுக்கப்பட்டது இல்லை. சின்னாறு பகுதியில் உள்ள சாலை வீடியோவில் உள்ளது போல இருக்காது என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. ேமலும் இதே வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் உள்ள தாடோபா-அந்தாரி புலிகள் சரணாலயம் அருகே எடுக்கப்பட்டது என கூறி கடந்த நவம்பர் மாதமே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. நாக்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புலிகள் சரணாலயத்தை ஒட்டிய சாலைகளில் புலிகள் அதிகம் நடமாடுவது உண்டு எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமராவதி வனச்சரக அதிகாரி தனபாலன் கூறுகையில், சின்னாறு பகுதியில் புலிகள் உள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை. ேமலும் இதற்கு முன்பு அப்பகுதி சாலைகளில் புலிகள் நடமாட்டம் இருந்ததில்லை எனவும் தெரிவித்தார்.

Tags : highway , Highway, Tigers, Forest Department Denial
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...