×

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை டிச.18க்குள் தெரிவிக்க கர்நாடக போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கர்நாடகா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை டிசம்பர் 18-க்குள் தெரிவிக்க கர்நாடக போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து ஆன்மிக பணியில் ஈடுபட்டார். நித்தியானந்தாவின் ஆன்மிக பேச்சில் பலர் மயங்கி அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர். பல நடிகைகளும் சீடராக சேர்ந்தனர். இந்நிலையில் ஆசிரமத்தில் பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது என்றும், பெண் சீடர் ஆரத்திராவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் புகார்கள் எழுந்தன.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, தனக்கு ஆண்மைத்தன்மை கிடையாது என கூறினார். ஆனாலும் நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டது. இவ்வாறு தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டதால் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. திடீரென்று ‘‘நானே பரமசிவன்’’ என கூறும் வகையில் நித்தியானந்தாவின் இணையதளத்தில் கைலாசா பற்றிய விவரம் வெளியானது. இதுபோன்ற சூழ்நிலையில் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அம்மனுவில், போலி சாமியார் நித்தியானந்தா மீது ராம்நகர் நீதிமன்றத்தில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கு விசாரணையின்போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. அவரின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஏதோ காரணத்தை கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிற நித்தியானந்தாவை கைது செய்வதற்கு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. லெனின் கருப்பனின் மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா எங்கே உள்ளார் என்பதை இன்றைக்குள் தெரிவிக்க கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் கர்நாடக போலீஸ் இன்று அறிக்கை தாக்கல் செய்யாததால் இறுதிக்கேடு விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை டிசம்பர் 18-க்குள் தெரிவிக்க கர்நாடக போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா மீதான வழக்ககளை விசாரிக்க ராம்நகர் நீதிமன்றத்துக்கு தடை விதித்துள்ளது உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : whereabouts ,Karnataka ,Nithyananda , Nithyananda, Karnataka Police, Icort
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!