×

கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை 80 சதவீதம் பாகன்கள் கட்டுப்பாட்டில் வந்தது: விரைவில் பாஷை கற்றுக்கொடுக்கப்படுகிறது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் சில மாதத்திற்கு முன்பு அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானை, அங்கிருந்து  இடம்பெயர்ந்து  அர்த்தனாரிபாளையம் மற்றும் ஆண்டியூர் கிராமம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தது. சுமார் ஒன்றரை  மாதத்திற்கு முன்பு தினமும் தொடர்ந்து அட்டகாசம் செய்ததுடன், தோட்டத்து சாளைகளை சேதப்படுத்தியது. நவமலை மற்றும்  சேத்துமடை, அர்த்தனாரிபாளையம் என பல இடங்களில், 4 பேரை கொன்ற, அந்த  ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.கடந்த நவம்பர் 9ம் தேதி முதல்  அரிசி ராஜா என்ற பெயரை பெற்ற அந்த ஒற்றை  காட்டு யானையை பிடிக்க, அர்த்தநாரிபாளையத்தில்    வனத்துறையினர் முகாமிட்டனர்.5 நாட்கள் தொடர்ந்து ேதடுதல்  வேட்டை நடந்தது. 13ம் தேதி இரவில்  ஆண்டியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்ற அரிசி ராஜா மயக்க ஊசி  செலுத்தி பிடிக்கப்பட்டது.  பின்னர் அந்த யானை, உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறில்  உள்ள மரக்கூண்டில்  அடைக்கப்பட்டது. அந்த யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டருகே, சுமார் 5 கும்கிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டன. காலை, மதியம், மாலை என  தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது. கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா, தற்போது சகஜமான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து  வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி அருகே அர்த்தனாரிபாளையத்தில் அட்டகாசம் செய்த அரிசி ராஜா யானை கடந்த  13ம் தேதி பிடிக்கப்பட்டது. அந்த யானை கும்கிகள் உதவியுடன், வரகளியாறு  மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, அதற்கென  இரு பாகன்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தென்னை ஓலை, கரும்பு உள்ளிட்ட உணவுகள் உண்பதை பழகி கொண்டாலும், சில நேரத்தில் அதன்  முரட்டுத்தனத்தை காண்பித்து,  துதிக்கையை உயர்த்தி பிளிறுகிறது. பாகன்கள் கொடுக்கும் உணவை உண்பதுடன், அந்த யானை சுமார் 80 சதவீதம் பாகன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கருதுகிறோம்.  வரகளியாறு கூண்டில் சுமார் ஒரு மாதமாக அடைக்கப்பட்டுள்ள அரிசி ராஜா யானையானது,  பாதுகாப்புக்கு நிற்கும் கும்கிகளிடம் சகஜமாக பழகுகிறது.  தற்போது அந்த யானைக்கு, சைகை மூலம் கமண்ட்ஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்திருக்கும். விரைவில் அரிசி ராஜா யானைக்கு, வனத்துறையினரால் பராமரிக்கப்படும் வளர்ப்பு  யானைகளுக்குண்டான  பாஷை கற்றுக்கொடுக்கப்படும்’ என்றனர்.


Tags : king ,bash ,pagans , Enclosed, Rice king ,elephant, taught
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்