×

ஆயிரம் ஆண்டு பழமையான 'வைகிங்'கப்பல் : நார்வேயில் கண்டுபிடிப்பு

நார்வே நாட்டின் எடோயா தீவில் மண்ணுக்குள் ஆயிரம் ஆண்டு பழமையான வைகிங் கப்பல் புதைந்திருப்பது ஜியோ ரேடார் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் நீளம் 56 அடி. தற்போது இதனை தோண்டும் திட்டம் ஏதுமில்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கப்பலின் காலம் குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது.

 வைகிங் கப்பல் என்பது 8 - 11ம் நுாற்றாண்டில் கடல் கொள்ளையர்கள், வணிகர்கள் ஒரு நாட்டுக்கு செல்லும் போது, அங்கேயே அதனை விட்டுவிட்டு, மற்றொரு கப்பலில் அடுத்த நாட்டுக்கு சென்று விடும் வழக்கம் இருந்தது.நோர்வேயில் மூன்று நன்கு பாதுகாக்கப்பட்ட வைக்கிங் கப்பல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் ஒஸ்லோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Norway ,Viking ,Thousand Year Old , Viking ship, Norway, innovation
× RELATED இந்த வார விசேஷங்கள்