×

போலி ஆவணம் மூலம் 1.50 கோடி நிலம் அபகரிப்பு டிராவல்ஸ் அதிபர் மனைவியுடன் கைது : மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபிமுரளி (50). தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 1.50 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பரங்கிமலையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரகுகுமார் (51)  மற்றும் அவரது மனைவி ஜெயகுமாரி (45) மற்றும் நெசப்பாக்கத்தை சேர்ந்த நண்பர் போத்திராஜா (34) ஆகியோர் உதவியுடன் போலி ஆவணம் உருவாக்கி நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றி பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் டிராவல்ஸ் அதிபர் ரகுகுமார், அவரது மனைவி ஜெயகுமாரி, நபணர் போக்திராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து நிலத்திற்கான போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : land ,Chancellor , 1.50 crore land grabbing , fake travels arrested
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!