×

பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் மழையால் சாய்ந்த மரத்தை மீண்டும் நட வேண்டும்: இயற்கை நல ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாப்பாக்குடி: பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் இரு வாரங்களுக்கு முன் கனமழையால் வேரோடு சாய்ந்த வேப்பமரத்தை மீண்டும் நட வேண்டும் என இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாக்குடி யூனியன் அலுவலகம் முக்கூடலில் உள்ளது. இவ்வலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை, தோட்டகலை துறை போன்ற இயற்கை நலன் சார்ந்த துறைகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அதிகளவு மரம் நடப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்த வேப்பமரம் சாய்ந்தது.

இயற்கை நலன் சார்ந்த துறை அதிகாரிகள் மரத்தை மீண்டும் நடுவதற்கு எந்த முயற்சியும் மேற்ெகாள்ளவில்லை. இது வேதனை அளிப்பதாகவும் அந்த மரத்தை அப்புறபடுத்தாமல் மீண்டும் அதே இடத்தில் திரும்ப நடப்பட வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Papakkudy Union ,welfare activists ,office , Papakkudy, a rain-fed tree
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...