×

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவ கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல: நானாவதி கமிஷன் இறுதி அறிக்கை

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல, கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்கு ஏதுமில்லை எனவும் நானாவதி கமிஷன் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பமும் அதனைத் தொடர்ந்து நடந்த கலவரமும் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சில அமைப்புகளின் பங்கு என்னவென்பது பற்றி இந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது. பல ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணைக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது. கமிஷன் அறிக்கை ஏற்கெனவே குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் இருந்துபோது தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கமிஷனின் இறுதி அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல எனவும் அந்த கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gujarat ,incident ,Godhra ,Nanavati Commission , Gujarat, Godhra train, combustion, riots, Nanavati Commission, Final Report
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்