×

சசிகலாவின் சகோதரர் திவாகரன் துவங்கிய அ.தி.க. பதிவு செய்யப்பட்ட கட்சி: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் மேலும் 10 கட்சிகளை சேர்த்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கடந்த ஆண்டு தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி 249வது கட்சியாக இணைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முகவரியாக எண் 8/1, கச்சேரி தெரு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் என்ற முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் அடிப்படையாக கொண்டுதான் மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி அண்ணா திராவிடர் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டதால், உள்ளாட்சி ேதர்தலுக்கான கட்சிகளின் பட்டியலில் இணைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Divakaran ,Sasikala ,brother ,State Election Commission Directive ,AIADMK ,party ,state election commission , Sasikala's brother, started a bankruptcy , Registered Party, State Election Commission, Directive
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!