×

முதல்வர் எடப்பாடியுடன் ராகவா லாரன்ஸ் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சந்தித்து பேசினார். நடிகர் ராகவா லாரன்ஸ், தனது பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி, அதன்மூலம் ஏழை குழந்தைகளுக்கு இதய சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து பலரும் லாரன்ஸ் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கேட்டு வருகிறார்கள். அனைவருக்கும் மருத்துவ உதவி செய்ய முடியவில்லை.இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது, ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்தும், இதற்கு அரசும் தனக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. சந்திப்பின்போது, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

Tags : Raghava Lawrence ,Chief Minister ,CM Edappadi ,Edappadi , Meet Raghava Lawrence, Chief Minister Edappadi
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்