×

‘ரேப் இன் இந்தியா’

புதுடெல்லி: மக்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று பேசியதாவது: கதுவா முதல் உன்னாவ் வரை, பல்வேறு இடங்களில் பல்வேறு பெண்கள், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். உன்னாவில் 23 வயது பெண்ணை கடந்தாண்டு  பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்தவர்கள், தற்போது ஜாமீனில் வெளிவந்து அந்த பெண்ணை தீவைத்து கொளுத்தி கொன்றனர்.

இது போன்ற சம்பவங்கள் குறித்து கேள்விப்படும்போது நான் வெட்கி தலை குனிகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி உள்நாட்டில் தொழிற்சாலைகளை அதிகரிப்பதற்காக `மேக் இன் இந்தியா’ திட்டத்தை உருவாக்கியது. இந்த பாதையை நோக்கி நாம் வெகுவாக முன்னேற வேண்டிய நிலையில், ரேப் இன் இந்தியா’ (இந்தியாவில் பலாத்காரம்) என்ற கொள்கையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எந்த மூத்த அரசியல்வாதியும் கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் குறித்து அவையில் கேள்வி எழுப்பவில்லை என்றார்.


Tags : Rap ,India , Rape in india
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!