×

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 252 கோடி மது பறிமுதல் : பேரவையில் முதல்வர் தகவல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.252 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர் தொடங்கியது. இதில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படுவது பற்றி  காங்கிரஸ் எம்எல்ஏக்க ள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு உள்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக வைத்துள்ள முதல்வர் விஜய் ரூபானி எழுத்து மூலமாக அளித்த பதில்:

குஜராத்தில் மதுபானங்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது அக்டோபர் 2019 வரை ரூ.252 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.231 கோடி மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள், பீர் 17.79 மற்றும் நாட்டு சாராயம் ரூ.3.12கோடி மதிப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அகமதாபாத்தில் ரூ.25.08 கோடி மதிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தில் பனாஸ் கந்தா மாவட்டம் உள்ளது. இங்கு பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மதிப்பு ரூ.22.13 கோடியாகும். மூன்றாவது இடத்தில் வால்சாத் உள்ளது. ரூ.17.15 மதிப்புள்ள மதுபானங்கள் இங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Gujarat , 252 crore ,liquor seizures, Gujarat,2 years: CM
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...