×

ராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்

சான்டியாகோ:  சிலி நாட்டில் 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.  சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவில் இருந்து சுமார் 3,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது புன்டா ஏரினாஸ் நகரம். நேற்று முன்தினம் மாலை 4.53 மணிக்கு இங்கிருந்து ஒரு ராணுவ விமானம் 38 பேருடன் அன்டார்டிகா நோக்கி புறப்பட்டு சென்றது. இதில், 17 பேர் விமான ஊழியர்கள். மற்றவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 6.13 மணிக்கு விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல மணி நேரம் முயன்றும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அதிபர் செபஸ்டின் பினிரா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விமானம் மாயமான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. நிலைமையை கவனித்து வருகிறோம்,’என்று பதிவிட்டுள்ளார்.  இதனிடையே, ‘நள்ளிரவு 12.40 மணிக்கு மேல் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருக்கும். அதனால், விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம்,’ என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை, உறைபனி உள்ளிட்ட காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற கருத்தை விமானப்படை மறுத்துள்ளது. விமானம் புறப்படும்போது நல்ல வானிலை இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் விமானத்ைத தேடும் பணி நடந்து வருகிறது. மேலும், கடல் பகுதியில் கப்பல் மூலமாகவும் தேடுதல் பணி மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.
Tags : Army ,plane crashes ,Chile Military Plane , Military aircraft, with 38 men in Missing, Chile
× RELATED சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட...