×

10 நிமிடங்களில் ரத்த பரிசோதனை செய்யும் ‘மாப்ஸ்கோப்’ என்ற புதிய கண்டுபிடிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சாதனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் புதுவகையான நுண்ணோக்கியைக் கண்டுபிடித்துள்ளது. ‘மாப்ஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது அலைபேசி மற்றும் நுண்ணோக்கியின் கலவையாகும். வழக்கமான நுண்ணோக்கியின் மேற்பரப்பில் பூதக்கண்ணாடி இருக்கும். ‘மாப்ஸ்கோப்’பில் அதற்குபதிலாக ஒரு அலைபேசி பொருத்தப்பட்டிருக்கும். இந்த அலைபேசி சோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பட்டையில் பூசப்பட்டிருக்கும் ரத்த மாதிரியைப் புகைப்படம் பிடிக்கிறது. பின்னர் அலைபேசியில் உள்ள செயலி, ரத்தத்தைச் சோதனை செய்து அடுத்த 10 நிமிடங்களில் முடிவளித்துவிடுகிறது.

நுண்ணோக்கி வழியாக 1000 மடங்கு பெரிதாக்கப்பட்ட ரத்த அணுக்களை அலைபேசி படம் எடுத்துக் கொள்கிறது. பின்னர் அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயலி ரத்த அணுக்களில் எத்தனை சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் உள்ளன என்பதை கணக்கிடுகிறது. இதன் அடிப்படையில் ரத்த சோகை உள்ளதா அல்லது மலேரியா, டெங்கு போன்றவற்றுக்கான நோய்க்கூறுகள் காணப்படுகிறதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரிவிக்கிறது. சராசரியாக ஒரு நுண்ணோக்கியின் விலை ரூ.40 ஆயிரமாகும். ஆனால், ‘மாப்ஸ்கோப்’ ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர்.

Tags : Mopscope ,Anna University ,Blood Test , Blood Testing, Mobscope, Innovation, Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...