×

வெங்காயம் ரூ220க்கு விற்கும்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒருகேடா?... தமிழக விவசாயிகள் சங்கம் சுவரொட்டி

திருச்சி:  தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மற்றும் பொதுநல அமைப்புகள், சமூக நீதி பேரவை ஆகியவை சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் காம்பவுண்ட் சுவர், மாநகராட்சி, காந்தி மார்க்கெட் மற்றும் மாநகர், மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், வெங்காயம் விலை கிலோ ரூ220க்கு உயர்ந்துள்ளது. இதனால் பெண்களின் கண்களில் கண்ணீர் வருகிறது. இயற்கை பேரிடர் பாதிப்பு, உற்பத்தி பொருளுக்கு உரிய விலையின்றி கடன் தொல்லையால் வேதனை அடைந்துள்ளனர்.

தேசிய விவசாய ஆணையங்களின் பரிந்துரைகளை கிடப்பில் போட்டுவிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க மத்திய, மாநில அரசுகள் துணை போகிறது. தமிழகத்தில் 3,000 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 300 கிலோ எடையில் கல்லாப்பெட்டி தேவையா? 2021க்குள் முழு மதுவிலக்கு என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட ஓ.ப., எ.ப.., ஒருங்கிணைப்பே உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு உங்களுக்கு ஒரு கேடா? இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Farmers' Union Poster Whats Up ,Kolkata ,Export Company , Onion, Local Elections, Tamil Nadu Farmers Association, Poster
× RELATED கொல்கத்தாவில் கோவாக்சின் என்ற கொரோனா...