வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்

நாங்குநேரி: நாங்குநேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது.

அருகில் உள்ள வயல்களில் இருந்து பூச்சிகள் மற்றும் விஷப்பாம்புகள் வெளியேற துவங்கியுள்ளன. நேற்று பிற்பகல் ஏழாம் வகுப்பு அறையில் விரியன் வகையைச் சேர்ந்த புல் விரியன் பாம்பு புகுந்தது. இதனைக்கண்ட மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காவலாளி மற்றும் ஆசிரியர் உதவியுடன் பாம்பை அடித்துக் கொன்றனர். இதையடுத்தே மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories:

>