நியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு

வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று எரிமலை வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பலரை காணவில்லை. நியூசிலாந்தில் இருந்து சுமார் 50 கி.மீ் தொலைவில் அமைந்துள்ளது ஒயிட் தீவு. இங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எரிமலையில் இருந்து  சல்பர்-டை-ஆக்சைடு வாயு வெளியேறியதை  அடுத்து கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் இரண்டாம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எரிமலை வெடிக்காததால் இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து நெருப்பு குழம்பும், சாம்பல் கலந்த புகையும் வெளியேறியது. எரிமலை வெடித்ததின் காரணமாக அந்த பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆபத்தில் சிக்கியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு சிலரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிமலை வெடிப்பால் சுமார் 12,000 அடி உயரத்துக்கு காற்றில் புகை மண்டலம் சூழ்ந்தது. எரிமலை சீற்றத்தை ெதாடர்ந்து மீட்பு குழுவினர் ஒயிட் தீவுக்கு விரைந்தனர். இதற்கிடையே எரிமலை வெடிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>