கடலோர காவல்படை தினம் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை: 44வது கடலோர காவல் படை தினம் வரும் பிப்ரவரி 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் சிலம்பம், யோகா, கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.

குறிப்பாக பிட் இந்தியா இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிட்னஸ் தொடர்பான பல்வேறு போட்டிகளும் நடந்தன. இதில் இந்திய ராணுவம், பள்ளி, கல்லூரி, பெரு நிறுவனங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த அணிகளும், தனி நபர்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ேநற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை சைனி ஆபிரகாம் வில்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை கமாண்டர் ஐஜி பரமேஷ் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.  விஐடி பல்கலைக்கழக துணை தலைவர், காமண்டன்ட் பிரேம் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : competitions ,winners , Coast Guard Day , prize for the winners, various competitions
× RELATED திருக்குறள் ஓவிய போட்டிகள்