×

இரும்புக்கடை, ஓட்டலில் தீ

திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் எதிரே, மணலி விரைவு சாலையோரம், ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. நேற்று இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றில் தீ பரவி அருகில் இருந்த  சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான,   ஓட்டலும் எரிந்தது.  

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மணலி, திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் இரு கடைகளும் தீக்கிரையாகின.
* தி.நகர் வெங்கட்ராமன் சாலையில் 3 மாடி கட்டிடத்தின் 3வது தளத்தில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு  நேற்று தீ விபத்து ஏற்பட்டதால், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை, தி.நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Tags : cafe , Iron Ore, fire at the cafe
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...