×

ஏரிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது கழிவு நீர் விடுவதை தவிர்க்க வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது.  இதில், பெரும்பாலான ஏரிகள் நகரமயமாதல் காரணமாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 10 ஆயிரம் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை கூறி வருகிறது. இந்த ஏரிகளில் சுற்றுச்சுவர், வேலி  அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததே ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பாசனம் மற்றும் குடிநீர் பயன்பட்டில் இருந்து வந்த ஏரிகளில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை கொட்டுவது, கழிவு நீர்  திறந்து விட்டு வருகின்றனர். இதனால், அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் கழிவு நீர் குளமாக இந்த ஏரிகள் மாறி வருகிறது.

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் கழிவு நீர் ஓடையாக மாறிய இந்த ஏரிகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வரும் காலங்களில் இந்த ஏரிகளில் இருந்து  குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில் அந்த ஏரிகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும்  உள்ளாட்சித்துறைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், குடிநீர் தேவைக்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. எனவே, ஏரிகளில் குப்பை கொட்டவோ, கழிவு நீர் திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் ெகாரட்டூர், ரெட்டேரி, மாதவரம், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளில் உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீர் கலக்கிறது. இதனால், அந்த ஏரிகளில்  தண்ணீர் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே, தான் அந்த ஏரிகளில் கழிவு நீர் வரும் வழியை அடைக்க முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் ஏரிகளில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால், ஏரி குப்பை கூடாரமாக மாறி  வருகிறது. இதனால், அந்த ஏரிகளில் நீர் பயன்படுத்த முடியாது. அதை தடுக்கவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்’ என்றார்.


Tags : lakes , Lake, Waste Water, Local Authority, Public Works Department, Letter
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!