×

பெசன்ட்நகர், பல்கலை நகர் கடற்கரையில் விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் மாயம்

சென்னை: பெசன்ட் நகர் மற்றும் பல்கலை நகர் கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். சென்னை ஐயப்பன்தாங்கல், ஈ.வி.பி. பிரபு அவென்யூவை சேர்ந்த சர்வேஸ்வரன் (18), கோடம்பாக்கம்,  தயாளன் நகர், பிரியா மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (18) மற்றும் லோகேஷ் (17), தேவா (17) ஆகியோர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடிஐயில் மோட்டார் மெக்கானிக் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வேஸ்வரன், ஆகாஷ், லோகேஷ், தேவா உள்பட 8 மாணவர்கள் நேற்று பகல் 11.30 மணியளவில் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் கவர்னர் விருந்தினர் மாளிகை பின்புறம் உள்ள கடலில் 8  பேரும் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று வந்து திடீரென்று சர்வேஸ்வரன், ஆகாஷ், லோகேஷ் ஆகிய மூன்று பேரையும் இழுத்துச்சென்றது.
 
இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து மீனவர்கள் ஓடிவந்து லோகேசை மீட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால்  சர்வேஸ்வரன், ஆகாஷ் ஆகியோர் கடல் அலையில் சிக்கி மாயமாகி விட்டனர். இச்சம்பவம் குறித்து தேவா, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மாயமான மாணவர்களை தேடி  வருகின்றனர். மற்றொரு சம்பவம்: சென்னை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள மேட்டுக்குப்பம் வி.பி.ஜி அவின்யூவை அடுத்த அம்பாள் அவின்யூவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (40). இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ரமணா (13)  என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரமணா துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை ரமணா தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஆனந்துடன் பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரைக்கு சென்றனர். பின்னர் ரமணா, விக்னேஷ் இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். ஆகாஷ்  கடற்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென ராட்சத அலை இருவரையும் இழுத்து சென்றது. இதை பார்த்த ஆகாஷ் கூச்சலிட்டான். அவனது சத்தம் கேட்டு அப்பகுதியை உள்ள மீனவர்கள் விக்னேஷை மீட்டு அங்கு உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவன் சிகிச்சை பெற்று வருகிறான். ரமணாவை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரமணாவின் பெற்றோர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.  புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, மாணவனை தேடி வருகின்றனர். கடலில் 8 பேரும் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று வந்து திடீரென்று சர்வேஸ்வரன், ஆகாஷ், லோகேஷ் ஆகிய மூன்று பேரையும்  இழுத்துச்சென்றது.

Tags : Besantnagar ,University City Beach , Besantnagar, University City Beach, Giant Wave
× RELATED பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் ₹1.41...