×

டாஸ்மாக் பெயர் பலகைகள் ஆய்வு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: தொடர் புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் உள்ள பெயர் பலகைகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள  டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் அறியும் வண்ணம் விற்பனை விவரம், உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதனால், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கவும், தகவல்களை  அறியவும் முடியாமல் சிரமம் அடைந்தனர்.

எனவே, சேதமடைந்த பெயர் பலகைகளை உடனடியாக மாற்ற வேண்டும். பெயர் பலகைகள் இல்லாத கடைகளில் உடனடியாக பெயர் பலகைகள் நிறுவப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவிற்கு பிறகும்  பல கடைகளில் பெயர் பலகைகள் மாற்றப்படாமல் இருந்தது. எனவே, டாஸ்மாக் கடைகளில் பெயர் பலகைகள் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : TASMAC, name boards, inspection
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...