×

வாலிபாலில் தங்கம்: கேப்டன் வினித்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய விளையாட்டு துறையின் மகுடத்தில் புதுப்புது  வைரங்களைப் பதித்து மின்னிடச் செய்வதில் தமிழக வீரர்-வீராங்கனையரின் பங்கு மகத்தானது. நேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப்  போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம்-கறம்பக்குடி தாலுகா-கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.  எனவே, தங்கத் தமிழர் ஜெரோம் வினித்துக்கும், அவர் தலைமையில் ஆடிய இந்திய வாலிபால் அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vinith Volleyball ,MK Stalin , Greetings by Jerome Vinith, Gold, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...