அஞ்சுகிராமத்தில் சூறைகாற்றுக்கு 1500 வாழைகள் முறிந்து சேதம்

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே பொட்டல் குளத்தில் சூறைக்காற்றில் வாழைகள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.  குமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்குளத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் சூறைக்காற்றில் முறிந்து நாசமாயின.

பொட்டல்குளத்தை சேர்ந்தவர் வில்சன் (45). விவசாயி. இவருக்கு சொந்தமான சுமார் 3  ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுமார் 3000 வாழை மரம் நட்டு பராமரித்து வந்தார். இதில் சுமார் 1500 மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்றில் முறிந்து நாசமாயின. இதனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு  ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி, வேளாண் துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று சேதம் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags : Hurricane Katrina , 1500 bananas were damaged in Hurricane Katrina
× RELATED ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் அதிகம்...