×

சாத்தான்குளம் அருகே ஊர் மாறி வழிகாட்டி பலகை...வாகன ஓட்டிகள் திணறல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே ஊர் மாறி வழிகாட்டு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.  சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் இருந்து கோமானேரி, கூவைகிணறு, கலுங்குவிளை விலக்கு, துவர்க்குளம், கொம்பன்குளம் வழியாக நெல்லை மாவட்டம் இட்டமொழி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக  ஸ்ரீவைகுண்டம், உள்ளிட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் சென்று திரும்புகின்றனர். துவர்குளம் விலக்கில் இருந்து நெடுங்குளம் வழியாக சாத்தான்குளம் வரும் சாலையும் உள்ளது.  இந்நிலையில் துவர்க்குளம் விலக்கில் நெடுஞ்சாலைத்துறையினர் துவர்க்குளம், கொம்பன்குளம் செல்லும் சாலையென வழிகாட்டி பெயர் வைக்காமல் அதற்கு அடுத்த பிரிவில் மேட்டுக்குடியிருப்பு என ஊர் மாறி பெயர் பலகை வைத்துள்ளனர்.

 இதனால் துவர்குளம், கொம்பன்குளம் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த குழப்பம் ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். ஆதலால் நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கவனித்து குழப்பத்தை  விளைவிக்கும் வழிகாட்டி பலகையை மாற்றி அமைக்க வேண்டும் என கிராமமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கொம்பன்குளம் முருகலிங்கம் கூறுகையில், துவர்க்குளம், கொம்பன்குளம் செல்லும் சாலை என இல்லாமல் ஊர் மாற்றி வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. வழி தெரியாமல்  இந்த சாலையை பயன்படுத்தி இட்டமொழி, திசையன்விளை பகுதிக்கு செல்பவர்கள் வழி மாறி பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் துவர்க்குளம் விலக்கு பகுதியில் பயணியர்கள் நிழற்குடை இருந்தது.

அதனை அதிகாரிகள் திடீரென  அகற்றி சென்று விட்டனர். இதனால் நிழற்குடை இல்லாமல் கிராமமக்கள் வெயில், மழையில் நின்று பஸ்சுக்கு காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. ஆதலால் புதிய. நிழற்குடை அமைக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம், பேய்க்குளம், துவர்க்குளம், கொம்பன்குளம் வழியாக இட்டமொழி செல்லும் வகையில் புறவழிச்சாலையாக சாலையை சீரமைக்க அமைக்க வேண்டும் வழி மாறியுள்ள வழி காட்டு பலகையை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : sathankulam , Traffic guide near sathankulam ...
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...