×

அண்ணாமலையார் கோயிலில் காவல் துறை சார்பில் நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை: கலெக்டர், ஐஜி துவக்கி வைத்தனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் காவல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை கலெக்டர், ஐஜி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்தீருவிழாவின் முக்கிய ழாவான பரணி தீபம் நாளை அதிகாலை 4 மணிக்கும், மாகாதீபம் அன்று மாலை 6 மணிக்கும் ஏற்றப்படுகிறது.மகாதீபத்தினை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபத்திருவிழா நாளன்று பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக நகர் பகுதி மற்றும் கிரிவலப்பகுதியில் 227 கண்காணிப்பு கேமராக்களும், கோயில் வளாகம் மற்றும் மாடவீதிகளில் 140 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க காவல் துறை சார்பில் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கண்காணிப்பு கேமராக்களுக்கான நவீன கட்டுப்பாட்டு அறை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சக்தி விலாஸ் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆகியோர் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். அப்போது, வேலூர் சரக டிஜஜி காமினி, டிஆர்ஓ ரத்தினசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Inauguration ,Modern Observatory ,Police Department ,Annamaliyar Temple: Collector ,IG ,Annamalaiar Temple , Modern Observatory ,Police Department, Annamalaiar Temple,Collector, IG Launched
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்