ஐஸ்வர்யா ராய் எல்லாருக்கும் மனைவியாகி விட முடியுமா?: கர்நாடகா அமைச்சர் சர்ச்சை கருத்து

பெங்களூரு: ‘நடிகை ஐஸ்வர்யா ராய் எல்லாருக்கும் மனைவியாகி விட முடியுமா?’ என்று கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான  பாஜ ஆட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சராக  இருப்பவர் பாஜ மூத்த தலைவர் ஈஸ்வரப்பா. இவர் நேற்று முன்தினம் பேட்டி அளித்தபோது, ‘தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் இடைத்தேர்தலில்  வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வழங்குவீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஈஸ்வரப்பா, ‘‘இளைஞர்கள் திருமண வயது  அடைந்ததும் ஐஸ்வர்யா ராயே தங்களுக்கு மனைவியாக வேண்டும் என்று ேகட்க  முடியாது. அதில், ஒருவருக்கு வேண்டுமானால் அப்படி நடக்கலாம்,’’ என்றார்.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயை அவர் இவ்வாறு கூறியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் உக்ரப்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்திய கலாச்சாரத்தின் மீது பாஜ.வுக்கு  நம்பிக்கை இருந்தால், தனது கருத்துக்காக அமைச்சர் ஈஸ்வரப்பாவை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க  சொல்ல வேண்டும். அவர் இந்த கருத்தின் மூலம் பெண்களை  அவமதித்துள்ளார். ராமர் பற்றி பாஜ பேசுவது எல்லாம் வெறும் அரசியல். ஈஸ்வரப்பா போன்றவர்களை பாஜ மேலிடம் கண்காணிக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>