×

ஹெல்மெட் அணியாததால் கல்லூரி மாணவரை தாக்கிய எஸ்ஐ

* அவமானத்தில் தூக்கில் தொங்கினார்
* மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரத்குமார் (19). ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். சரத்குமார் நேற்று முன்தினம் மாலை தனக்கு காலணி வாங்குவதற்காக குமாரபாளையத்தில் இருந்து வாழப்பாடிக்கு பைக்கில் சென்றார். காலணி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்றபோது, பழைய காவல் நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   சரத்குமார் ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்றதால் எஸ்ஐ சிவசக்தி வாகனத்தை நிறுத்தம்படி கூறியுள்ளார். ஆனால், சரத்குமார் சற்று தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ, விசாரணை எதுவும் நடத்தாமல் சரத்குமாரை பொதுமக்கள் மத்தியில் ஜாதி பெயரை சொல்லி திட்டி காலால் எட்டி உதைத்துள்ளார். தொடர்ந்து, சரத்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர்.

சரத்குமார் பெற்றோர் வாகனத்தின் உரிமத்தை காட்டிவிட்டு இரவு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சரத்குமார் திடீரென தனது அறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரத்குமாரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம இரவு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நேற்று மதியம் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



Tags : SI ,college student , SI assaulted ,college, student , not wearing helmet
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ