×

சீனாவுக்கு வழங்கப்படும் கடன் உதவி மேலும் குறைக்கப்படும்; உலக வங்கி அறிவிப்பு

வாஷிங்டன்: சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. இதனிடையே ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்; அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார நாடுகளுக்கு உலக வங்கி கடன் வழங்கக்கூடாது என்றும்  வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் என அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை முன்னாள் அதிகாரி டேவிட் மால்பாஸ் தலைமையில் செயல்படும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏற்கெனவே சீனாவுக்கு கடன் அளிப்பது பலமடங்கு குறைந்து விட்டது. வரும் காலத்தில் மேலும் அது குறைக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் வளர்ந்து விட்ட நாடுகளுக்கு கடனை நிறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : China ,World Bank Announcement ,Announcement ,World Bank , China, Credit Aid, World Bank
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்