×

குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

குஜிலியம்பாறை :குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த சாரைப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று இங்குள்ள மகப்பேறு சிகிச்சை கட்டிடம் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள பைப் அருகே பாம்பு புகுந்தது. இதனால் நோயாளிகள், உடனிருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் தெரிவித்தனர். குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருது தலைமையில், தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பிவிசி பைப்பிற்குள் சென்ற பாம்பை லாவகமாக மடக்கி உயிருடன் பிடித்தனர். அது 6 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு என தெரியவந்தது. பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kujiliyampara Government Hospital In Kujiliyamparai Government Hospital Snakes , Kujiliyamparai ,Government Hospital,Snake,Fire Department
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...