×

மூணாறில் குளிர்கால திருவிழா சின்னம் வெளியீடு

மூணாறு :  மூணாறில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையில் குளிர்கால திருவிழாவின் சின்னம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் குளிர்கால திருவிழா துவங்க உள்ளது. இடுக்கி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் டிச.21ம் தேதி முதல் ஜன.5ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலைநிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, உணவு கண்காட்சி, ஆகாய கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள்  குளிர்கால திருவிழாவில் இடம்பெறுகிறது. இத்திருவிழாவிற்கான சின்னத்தை எர்ணாகுளத்தை சேர்ந்த நந்து  வடிவமைத்துள்ளார். இந்த சின்னத்தை இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன், தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் வெளியிட்டனர். சுற்றுலாத்துறை துணை இயக்குனர் தாமஸ் ஆண்டனி, மாவட்ட சுற்றுலாத்துறை இயக்குனர் விஜயன், தாசில்தார் குன்னப்பள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Munnar , Munnar ,Winter Festival Logo,Festival Logo,Tourist
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை